Connect with us

அஜித் கூட நடிக்கணுமா வேண்டாமா… அட்வைஸ் செய்து இயக்குனரிடம் சிக்கிய ரமேஷ் கண்ணா!..

ramesh khanna ajith

Cinema History

அஜித் கூட நடிக்கணுமா வேண்டாமா… அட்வைஸ் செய்து இயக்குனரிடம் சிக்கிய ரமேஷ் கண்ணா!..

Social Media Bar

Ajith and Ramesh Khanna : தமிழ் சினிமா இயக்குனர்களில் பல வெற்றி படங்களை கொடுத்த ஒரு இயக்குனராக இயக்குனர் சரண் இருந்து வருகிறார். அவருடைய முதல் திரைப்படமான காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியை கொடுத்த படங்கள் எனலாம்.

இப்போது உள்ள கே.ஜி.எஃப் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் போல இல்லாமல் காதல் திரைப்படங்களை வைத்து பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் சரண். சரணின் காதல் திரைப்படங்களுக்கு நடுவே உண்டான ஒரு உண்மை காதல் என்றால் அது அஜித் மற்றும் ஷாலினியின் காதல்தான் என்று கூறவேண்டும்.

அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தான் ஷாலினி மற்றும் அஜித்திற்கு இடையான காதல் என்பது உருவானது. இதை இயக்குனர் சரணே பல பேட்டியில் கூறியிருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது படபிடிப்பில் சில நாட்களிலேயே அஜித்தும் ஷாலினியும் காதலித்து வருவதை சரண் அறிந்து கொண்டார்.

amarkalam
amarkalam

இருந்தாலும் கண்டும் காணாதது போல அவர் இருந்து கொண்டிருந்தார் இந்த விஷயம் ஏதும் தெரியாத ரமேஷ் கண்ணா அஜித்திடம் வாயை விட்டு சிக்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனை தமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  அமர்க்களம் படத்தில் ஷாலினியை கடத்தி வைத்திருக்கும் காட்சி ஒன்று படமாக்கபட்டிருக்கும்.

அந்த காட்சியின் பொழுது சும்மா இல்லாமல் ரமேஷ் கண்ணா அஜித்திடம் சென்று சினிமா நடிகைகளை எல்லாம் திருமணம் செய்யக்கூடாது அவர்கள் குடும்பத்திற்கு ஒத்துவர மாட்டார்கள் குடும்பப்பாங்கான பெண்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த சரணுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா இல்லையா என்று கேட்டிருக்கிறார் ஏன் என ரமேஷ் கண்ணா விழித்த போது அஜித்தும் ஷாலினியும் காதலித்து வருகிறார்கள் நீங்கள் அவரிடம் சென்று ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறுகிறீர்களே என்று கூறவும் ரமேஷ் கண்ணாவிற்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாதே என்று கூறி கூறி இருக்கிறார் ரமேஷ் கண்ணா.

To Top