News
ஏ.கே 63 – பல ஹிட் கொடுத்த இயக்குனோரோடு இணையும் அஜித்
தமிழில் வசூல் சாதனை செய்யும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இதற்கு பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பிறகு 18 மாதங்கள் ஒரு உலக சுற்றுலா போகலாம் என முடிவெடுத்திருந்தார் அஜித். இந்நிலையில் அஜித்தின் 63 வது படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஷ்ணுவர்தன் நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணி என்பது ஒரு ஹிட் கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித் 18 மாதம் சுற்றுலா சென்றுவிட்டு இந்த படத்தில் நடிக்கிறாரா? அல்லது இந்த படத்தை முடித்துவிட்டு சுற்றுலா செல்ல இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
