News
சிவகார்த்திகேயன் தனுஷ் போட்டி எல்லாம் இந்த மாதிரி போட்டியாதான் இருக்கு!.. விளாசும் விநியோகஸ்தர்!.
எல்லா காலக்கட்டத்திலும் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது ஆனால் சமீப காலங்களாக அவை அவ்வளவு ஆரோக்கியமாக நடக்கவில்லை என கூறுகிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்.
பொதுவாக திரைப்படத்தில் போட்டி என்பது எத்தனை வெற்றி படங்கள் தருகிறோம் என்பதில் இருக்க வேண்டும். ஆனால் சம்பள விஷயத்தில்தான் இவர்களுக்குள் போட்டி இருக்கிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றியடைந்த பிறகு தனது சம்பளத்தை உயர்த்தினார்.

30 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தினார். அதற்கு முன்பு வரை தனுஷ் 14 கோடிதான் சம்பளம் வாங்கி வந்தார். அதே போல சிம்புவும் 8 கோடிதான் வாங்கி வந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் 30 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தியதும் அவருக்கு முன்னாள் இருந்து இருக்கும் நாங்கள் மட்டும் ஏன் குறைவான சம்பளம் வாங்க வேண்டும் என சிம்பு தனுஷ் இருவரும் தங்களது சம்பளத்தை 35 கோடிக்கு உயர்த்திவிட்டனர்.
அவர் ஒரு படம் 100 கோடிக்கு ஹிட் கொடுத்துள்ளார். அப்படி என்றால் நாமும் ஒரு இரண்டு படங்களை அதே போல ஹிட் கொடுத்து சம்பளத்தை உயர்த்துவோம் என நல்ல இயக்குனர்களை பார்த்து கதை தேர்ந்தெடுப்பது இதை எல்லாம் எந்த நடிகர்களும் செய்வதில்லை. போட்டி என்பது வெறும் சம்பள அளவில்தான் இவர்களிடம் உள்ளது என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
