Connect with us

இந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் ஏ.ஆர் ரகுமானுக்கும் நடந்திருக்கு!. மொத்த பாட்டையும் தொலைத்த படக்குழு!.

prabhu deva ar rahman

News

இந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் ஏ.ஆர் ரகுமானுக்கும் நடந்திருக்கு!. மொத்த பாட்டையும் தொலைத்த படக்குழு!.

Social Media Bar

AR Rahman: தமிழ் சினிமாவில் புது வித இசையை கொண்டு வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.

ஆனால் அவரது இசையானது எட்டு திக்கும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானுக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைக்க துவங்கியது. நிறைய திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க துவங்கினார்.

இதனையடுத்து மணிரத்தினம், சங்கர் மாதிரியான இயக்குனர்கள் தொடர்ந்து அவர்களது திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன்படி ஏ.ஆர் ரகுமானும் அவர்களுக்கு இசையமைத்து கொடுத்தார்.

AR Rahman
AR Rahman

இந்த நிலையில் தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தில் நடந்தது போலவே ஏ.ஆர் ரகுமானுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காதலன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கும்போது அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்தார்.

இந்த நிலையில் படத்திற்கான மொத்த இசையையும் போட்ட பிறகு அவற்றை மொத்தமாக படக்குழுவிடம் ஒப்படைத்தார் ஏ.ஆர் ரகுமான். ஆனால் எப்படியோ அது தொலைந்துவிட்டது. இதனையடுத்து ஏ.ஆர் ரகுமானிடம் மீண்டும் அதே பாடல்களை இசையமைத்து கேட்டுள்ளனர்.

பிறகு மீண்டும் பாடகர்களை அழைத்து அந்த அனைத்து பாடல்களும் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போவது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் போல.

To Top