Special Articles
எப்ப பார்த்தாலும் அலுக்காத ஆல்டைம் ஃபேவரைட் 6 தமிழ் படங்கள்..!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில் ஒரு சில முன்னணி ஹீரோக்கள் நடித்த திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களுக்கு ஃபேவரைட் திரைப்படங்களாக இருக்கும்.
அந்த வகையில் நாம் சிறுவயதில் ரசித்த படங்கள் இன்றளவும் நம் மனதை விட்டு நீங்காமல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கும். தற்போது வரை தொலைக்காட்சியில் இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கக்கூடிய தமிழ் படங்களின் பட்டியலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாகை சூட வா 2011
நகைச்சுவை மற்றும் காதல் கலந்து திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் விமல், இனியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். வேலு தம்பியாக விமல் இந்த படத்தில் நடிக்க ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்.
கிராம சேவா என்ற சமூக நல அமைப்பின் மூலம் ஆறு மாத காலம் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர முன்வரும் இளைஞர்களுக்கு சம்பளம் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்று வருகிறது. இந்த சான்றிதழ் அரசாங்க வேலைக்கு பயன்படும் என்பதால் வேலு தம்பி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு பாடம் சொல்லிக் கொடுக்க செல்கிறான்.
அங்கு செங்கல் சூலையில் வேலை பார்க்கும் மக்களையும், அந்த மக்களின் குழந்தைகளுக்கும் கூலி கூட தராமல் அந்த முதலாளி அவர்களை ஏமாற்றும் விஷயம் ஹீரோவுக்கு தெரிய வர, அந்த பிள்ளைகளுக்கு எவ்வாறு கல்வியறிவு கொடுக்கிறார்.
அந்த மக்களுக்கு அந்த முதலாளியின் ஏமாற்று வேலையை புரிய வைப்பதற்காக அரசாங்க வேலை கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு அந்த குழந்தைகளுக்காக அந்த ஊரிலேயே அவர் தங்க முடிவெடுப்பதையும் இந்த படம் அழகாக காண்பித்திருக்கிறது.
துள்ளாத மனமும் துள்ளும் 1999
நடிகர் விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்தப் படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க அவர் அங்கீகாரம் பெறாத ஒரு பாடகராக அந்தப் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல மேடைகளில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்த குட்டி, ருக்மணி என்னும் பெண்ணால் கவரப்படுகிறான். ஆனால் ருக்மணிக்கு குட்டியின் குரல் மட்டும் தான் தெரியும். குட்டியின் முகத்தை இதுவரை அவள் பார்த்ததில்லை. பலமுறை முயற்சி செய்தும் அவளால் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் குட்டி யார் என்று தெரியாமல் இருக்கும் ருக்மணிக்கு, குட்டியை ஒரு எதிர்மறையான சூழ்நிலையில் பலமுறை பார்க்கிறாள். இதனால் இவள் குட்டியை ரவுடி என நினைத்துக் கொண்டு அவனை வெறுக்க செய்கிறாள். ஒருமுறை குட்டியிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவனைத் துடித்துக் கொண்டு போகும்போது ருக்மணியின் கல்லூரியில் ஒரு ஆசிட் பாட்டிலை விஜய் தள்ளிவிட அது ருக்மணியின் கண்களை பாதித்து பார்வையை ருக்மணி இழைக்கிறாள்.
பார்வையற்ற அவளுக்கு குட்டி நண்பராக மாறி கண் பார்வை கிடைக்க தன்னுடைய அம்மாவின் கண்களை தானமாக வழங்குகிறான். இதற்கிடையில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆப்ரேஷன் செய்ய நாற்பதாயிரம் ரூபாய் தேவைப்படும் நிலையில், தன்னுடைய கிட்னியை தானமாக வழங்க முடிவு செய்கிறான்.
சிகிச்சைக்கு பணம் கொடுத்துவிட்டு சென்னை திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த போது குட்டியை தீவிரவாதி என போலீசார் கைது செய்கிறார்கள். சிறையில் அடித்த குட்டி 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய சொந்த பகுதிக்கு வருகிறான். ஆனால் அந்த பகுதி தற்போது முற்றிலுமாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் ருக்கு கலெக்டராக இருக்கிறாள். பார்வை கிடைத்த அவள் குட்டியை மீண்டும் பார்க்கும்போது அவள் ரவுடி என நினைத்து, தன் கண் பார்வை இழப்புக்கு இவன் தான் காரணம் என கைது செய்ய உத்தரவிடுகிறார்.
இறுதியாக கைது செய்தது ரவுடி அல்ல. அவள் நீண்ட நாட்களாக தேடிய குட்டி தான் என்பதை எவ்வாறு அறிந்து கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
வானத்தைப்போல 2000
விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வானத்தைப்போல. தனது மூன்று சகோதர்கள் மட்டும் உலகமென நினைத்து வாழ்கிறான் வெள்ளைச்சாமி. மூவரில் மூத்தவர் முத்து ஒரு சிறிய ஹோட்டலில் சமையல்காரர். முத்து கௌரியை காதலிக்கிறார்.
இதனால் கௌரியின் அரண்மனை பங்களாவில் சமையல்காரராக வேலை செய்யும் முத்துவை கௌரி வேலைக்காரன் என நினைத்து பல சூழ்நிலையில் அசிங்கப்படுத்துகிறாள். இறுதியாக முத்து வேறு யாரும் இல்லை தான் சிறுவயதில் நெருங்கி பழகிய தோழன் என தெரிந்து முத்துவை காதலிக்கிறாள்.
இறுதியாக இருவரும் திருமணம் செய்து கொண்டு முத்துவின் வீட்டிற்கு வருகிறார்கள். இரண்டாவது தம்பி சண்முகம் சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். சுமதி வெள்ளைச்சாமி இடம் எப்பொழுதும் கோபத்தை காட்டுபவர் ஆக இருக்கிறாள். அதன் பிறகு அவரின் உண்மை அன்பை புரிந்து கொண்ட அவள் மதிப்புடன் அவரை நடத்துகிறார்.
மூன்றாவது இளைய சகோதரர் செல்வகுமார் ஒரு மருத்துவர். இவர் நந்தினி என்ற பெண் தோழியை காதலிக்கிறாள். இவர் வெள்ளைச்சாமியின் எதிரியான தர்மலிங்கத்தின் மகளாக இருக்கிறாள். இறுதியாக தர்மலிங்கத்தின் மகளை இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்வாரா? மேலும் தர்மலிங்கத்திற்கும் வெள்ளைச்சாமிக்கும் என்ன பகை என்பது தான் படத்தின் கதையாக அமைகிறது.
சூரியவம்சம் 1997
சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரியவம்சம். இந்த படத்தில் சரத்குமார் அப்பாவாகவும், மகனாகவும் நடித்திருப்பார். இதில் அப்பாவிற்கு பிடிக்காத பையனாக சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் சின்ராசுவின் தங்கை திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மாப்பிள்ளையின் தங்கை நந்தினி சின்ராசுவை காதலிக்கிறாள். ஆனால் இதற்கு சின்ராசு மறுப்பு தெரிவிக்கிறார். இதற்கான காரணத்தை அவர் உறவினரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். சின்ராசு படிப்பில் பலவீனமானவன் என்பதால் அவரின் உறவுக்கார பெண்னான கௌரியை காதலித்து வந்ததாகவும், பெரியவர்கள் இருவரின் திருமணத்தை நடத்த முன்வந்த போது இதில் விருப்பமில்லாமல் கௌரி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.
இதை கௌரி சின்ராசு இடம் தெரிவிக்க சின்ராஸ் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என அப்பாவிடம் கூறியிருக்கிறார். அன்றிலிருந்து சின்ராசு உடன் அப்பா பேசுவதில்லை.
சின்ராசுவும் ,நந்தினியின் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில், இதை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளாத போது இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வீட்டார்களும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று கூறும் நிலையில், படிக்காத சின்ராசு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை எவ்வாறு அடைகிறான் என்பதும், அந்த ஊர் மாவட்ட கலெக்டராக நந்தினி எவ்வாறு மாறுகிறார் என்பதையும், சின்ராசுவின் அப்பாவும், சின்ராசும் சேர்ந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை.
புன்னகை தேசம் 2002
2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிகர் தருண், குணால், சினேகா, பிரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். கணேஷ், ராஜா, செல்வம், விஜய் என்ற கதாபாத்திரங்களில் தருண், குணால்,ஹம்சவர்தன், தாமு நடித்திருக்கிறார்கள்.
ராஜா, செல்வம், விஜய் ஆகிய மூன்று நண்பர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சத்துடன் பாடகர் ஆகவும், கலெக்டராகவும், மிமிக்கிரி கலைஞராகவும் உருவாக விரும்புகிறார்கள். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் ஆதரவு தெரிவிக்காத நிலையில் மூவரும் சென்னைக்கு வந்து போராடுகிறார்கள்.
இந்நிலையில் கணேசாக நடிக்கும் தருண் தனது மாமா மகளான சினேகாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால் பணக்காரராக இருக்கும் அவரின் மாமா கணேஷை அசிங்கப்படுத்துகிறார். இதனால் ராஜா தன்னுடைய மூன்று நண்பர்களுடன் ஒன்றாக ஒரே அறையில் தாங்கி அவர்களின் லட்சத்திற்கு எவ்வாறு உதவுகிறான் என்பதும், இறுதியாக ராஜா தன்னுடைய மாமா மகளை திருமணம் செய்து கொண்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
கில்லி 2004
விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கில்லி. வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். தனலட்சுமி ஆக த்ரிஷா இந்த படத்தில் நடிக்க, வேலு என்ற கதாபாத்திரத்தில் விஜய் கபடி வீரராக இருக்கிறார்.
வேலுவின் அப்பா போலீஸ். ஆனால் வேலு படிப்பில் நாட்டம் இல்லாமல் கபடி என்று சுற்றுவதால் வேலுவை அவரின் அப்பாவிற்கு பிடிக்காது. இந்நிலையில் கபடி போட்டிக்காக தனலட்சுமி ஊருக்கு செல்லும்போது, அங்கு முத்துப்பாண்டியால் தனலட்சுமி பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்.
இதனால் தனலட்சுமி வில்லன் முத்துப்பாண்டிவிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறான். யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டின் அறையில் அவளை தங்க வைக்கிறான். தனலட்சுமி எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என வேலு பல முயற்சிகளை செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனலட்சுமிக்கு வேலுவின் மீது காதல் ஏற்படுகிறது.
இறுதியாக முத்துப்பாண்டி வேலுவை தேடி அவரின் ஊருக்கு வர, போலீசாக இருக்கும் வேலுவின் அப்பாவும் தனலட்சுமியை தேடுகிறார். தனலட்சுமி தன்னுடைய வீட்டிலேயே இருப்பதை பார்த்த வேலுவின் அப்பா அவளை அழைத்துச் செல்ல முற்படுகிறார். இந்நிலையில் வேலு அனைவரிடமிருந்தும் தனலட்சுமி காப்பாற்றி வெளிநாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க விமான நிலையம் செல்கிறான்.
இறுதியாக கபடி போட்டியில் பங்கேற்கும் வேலு தனலட்சுமியை நினைக்கிறான். அப்போது தனலட்சுமி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த வேலு தனலட்சுமியை காதலிக்கிறான். ஆனால் தனலட்சுமி ஊருக்கு செல்லாமல் கபடி விளையாடும் இடத்திற்கு வருகிறார்.
இந்நிலையில் வில்லனும் வேலுவை கண்டுபிடித்து மைதானத்திற்கு வர, இறுதியாக வில்லனுக்கும் வேலுவிற்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்