ரசிகை ஒருவர் இறந்த பிரச்சனைகள் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஷோவிற்கு சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுக்கிறேன் என்று அல்லு அர்ஜுன் ஒரு திரையரங்கிற்கு வந்திருந்தார்.
அப்பொழுது அந்த திரையரங்கிற்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த பெண்மணி ஒருவர் கூட்டத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து வழக்கில் அல்லு அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று முடிவு செய்யப்பட்டது.
அரசியல் காரணம்:
ஏனெனில் அன்று அல்லு அர்ஜுன் அந்த ஷோவிற்கு வரவில்லை என்றால் இந்த கூட்ட நெரிசல் உருவாகி இருக்காது என்பது பலரது கருத்தாக இருந்தது. அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நேரங்களிலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இன்று காலையிலேயே அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் கைதானதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஏனெனில் தெலுங்கானாவின் முதலமைச்சர் ஆன ரேவந்த் ரெட்டி முதலமைச்சரானபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து எந்த ஒரு பதிவையும் அல்லு அர்ஜுன் போடவில்லை.
அதுவும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்சியில் நின்ற அவரது நண்பரான சில்பா ரவி என்பவருக்கு ஆதரவாக நிறைய முறை அல்லு அர்ஜுன் பேசியிருக்கிறார். அதுவுமே கூட இந்த கைக்கு பின்னால் காரணமாக இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.