சினிமா துறை எப்படி பெரிதாக உயர்ந்திருக்கிறதோ அதே போல சின்னத்திரையும் உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகள்தான் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள்.
இப்பொழுது சீரியல் துறையில் உள்ளவர்களே அந்த மாதிரி வாங்க துவங்கி விட்டனர். அதிலும் முக்கியமாக ஆலியா மானசா மிக அதிகமான வருமானத்தை ஈட்டி வருகிறார்.
சீரியல் துறையில் இருக்கும் பலருமே கூட அவரை கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய வருமானம் இருக்கிறது. இப்பொழுதுதான் ஆலியா மானசா கிட்டத்தட்ட ரெண்டு கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் வீடு ஒன்றை கட்டி அதில் குடிபோனார்.
கேரளாவில் சொகுசு கப்பல்:

இந்த நிலையில் தற்சமயம் கேரளாவில் சொகுசு கப்பல் ஒன்றை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொகுசு கப்பலில் வி.ஐ.பிகள் தங்கிக் கொள்ளும் வசதி உண்டு.
கேரளாவிற்கு இவர் செல்லும் பொழுது மட்டும் அங்கே தங்கிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த கப்பலின் விலை மட்டும் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சாமானிய மக்களால் யோசிக்கக்கூட முடியாத வருவாயை ஈட்டி வருகிறாரே? என்று அனைவரும் இதை கண்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.






