நடிகையிடம் மேக்கப் மேனாக சேர்ந்து கமலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்!.. யார் தெரியுமா?..

சினிமாவில் அதிக செல்வத்தோடு வந்து ஒன்றுமே இல்லாமல் போனவர்கள் உண்டு. அதே போல ஒன்றுமே இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர்களும் உண்டு. இப்படியாக தமிழில் பெரும் உயரத்தை தொட்டவர்தான் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம்.

நடிகை விஜயசாந்தியிடம் மேக்கப் மேனாக பணிப்புரிந்து வந்தவர் ஏ.எம் ரத்தினம். விஜயசாந்தியிடம் பல காலமாக மேக்கப் மேனாக இருந்து வந்தவருக்கு குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

இந்த ஆசையை விஜயசாந்தியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயசாந்தி இவருக்கு வாய்ப்பளித்தார். அதனை தொடர்ந்து விஜயசாந்தியை கதாநாயகியாக வைத்து இவர் இயக்கிய திரைப்படம் கார்த்தவ்யம். இந்த திரைப்படம் தெலுங்கில் அமோக வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து நடிகை விஜயசாந்திக்கும் இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றது.

Social Media Bar

இதனையடுத்து இந்த படம் தமிழிலும் வைஜெயந்தி ஐபிஎஸ் என்கிற பெயரில் வெளியானது. தமிழிலும் இந்த படம் நல்ல வெற்றியை கண்டது. அதனை தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க துவங்கினார் ஏ.எம் ரத்தினம். கமல் நடித்த இந்தியன் திரைப்படத்தை இவர் தயாரித்தார்.

மேலும் கோவில் கில்லி, 7ஜி ரெயின்போ காலணி மாதிரியான திரைப்படங்களை தயாரித்தார். இப்படியாக ஒரு மேக்கப் மேனாக வந்து பெரும் உச்சத்தை தொட்டார் ஏ.எம் ரத்தினம்.