Connect with us

அந்த வார்த்தை சொல்லி ஏமாத்துனவங்க அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த அமலாபால்

Tamil Cinema News

அந்த வார்த்தை சொல்லி ஏமாத்துனவங்க அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த அமலாபால்

Social Media Bar

தமிழில் சிந்து சமவெளி, விகடகவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது மைனா திரைப்படம்தான்.

அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். அமலாபாலின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அது பல சமயங்களில் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது.

அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்த காதல் வாழ்க்கை சீக்கிரமே முடிந்துவிட்டது. இப்படி சில காதல் முறிவுகளுக்கு பிறகு அமலாபால் தற்சமயம் சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசியுள்ளார்.

அதில் அவரிடம் ஒருமுறை உங்கள் கடந்த கால காதல்களை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தீர்களே அதற்கு என்ன காரணம் என கேட்டனர்.

அதில் அவர் கூறும்போது எல்லாம் மிக எளிதாக காதல் என்கிற வார்த்தையை பயன்படுத்தி என்னை ஏமாற்றிவிடுகின்றனர். எனவே உண்மையான காதலை என்னால் கண்டறியவே முடியவில்லை. காதல் என்று வருபவர்கள் எல்லாம் நமக்கு விதிமுறைகளைதான் போடுகிறார்கள்.

காதல் என்கிற பெயரில் எப்படியெல்லாம் ஒரு உறவை மோசமானதாக ஆக்க முடியுமோ அதைதான் இங்கு பலரும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நடுவில் உண்மையான காதல் நமக்கு கிடைக்கும்போதுதான் நமக்கே இதுதான் காதல் என தெரிகிறது. இப்படியெல்லாம் ஒரு காதல் கிடைக்குமா என யோசிக்க தோன்றுகிறது.

எனவேதான் என்னுடைய பழைய காதலர்களை பழிவாங்கும் விதத்தில் அந்த பதிவை போட்டேன் என கூறியுள்ளார் அமலா பால்.

To Top