Tamil Cinema News
விஜய் அஜித்தோடு போட்டியிடும் எஸ்.கே..! அமரன் முதல் நாள் வசூல் நிலவரம்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் நேற்று வெளியான திரைப்படம் அமரன். தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முக்கிய படங்களில் அமரன் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருந்தது.
ராணுவம் தொடர்பாக இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் உயர்ந்தது. ஏனெனில் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இதுவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
முதல் நாள் வசூல்:
ஜி.வி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் படபிடிப்புக்காக உண்மையான ராணுவ தளவாடங்களுக்கு சென்றதாக கமல்ஹாசனே ஒரு பேட்டிகள் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வெளியான முதல் நாளே 16 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் விஜய் நடித்த கோட் மற்றும் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படங்களுக்கு பிறகு முதல் நாளே அதிக வசூல் கொடுத்த மூன்றாவது திரைப்படமாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இருக்கிறது.
உலக அளவில் 35 கோடி வசூல் செய்திருக்கிறது அமரன் திரைப்படம் எப்படியும் இந்த வாரம் முடிவிற்குள் இந்த திரைப்படம் இந்திய அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
