Connect with us

ரஜினி, விஜய் படத்துக்கு கூட இதெல்லாம் நடக்கல.. மாஸ் காட்டும் சாய் பல்லவி.. ஆடிப்போன பிரபலங்கள்..

rajini vijay sai pallavi

Tamil Cinema News

ரஜினி, விஜய் படத்துக்கு கூட இதெல்லாம் நடக்கல.. மாஸ் காட்டும் சாய் பல்லவி.. ஆடிப்போன பிரபலங்கள்..

Social Media Bar

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று திரையரங்குகளில் வெளியானது அமரன் திரைப்படம். ரசிகர்கள் பலவித எதிர்பார்ப்புடன் அந்த திரைப்படத்திற்கு சென்றனர். அதேபோலவே அமரன் திரைப்படமும் தற்சமயம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனை விடவும் சாய் பல்லவியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்க்கும் கதாபாத்திரமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.

இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது அமரன் திரைப்படம். முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பின் காரணமாக இந்த திரைப்படத்திற்கு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியிருக்கிறது.

sai pallavi

sai pallavi

தெலுங்கில் வரவேற்பு

ஏனெனில் தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதன் மூலமாக அங்கு சிவகார்த்திகேயனை விடவும் வரவேற்பை பெற்றவராக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தற்சமயம் அமரன் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டை விடவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகள் அதிகரிக்க துவங்கி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தமே 450 திரையரங்குகளில்தான் அமரன் திரைப்படம் ஓடி வருகிறது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் சாய்பல்லவி என்று கூறப்படுகிறது தமிழில் பெரிய நடிகர்களான விஜய் ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு தமிழ்நாட்டை விடவும் ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ஓடியதே கிடையாது இந்த நிலையில் ஒரு நடிகைக்காக அந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று இருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

To Top