Tamil Cinema News
வியாபாரத்துக்காக கொச்சை படுத்துகிறதா?.. அமரன் பட ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?..
தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.
இறந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. அமரன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் திரைப்படமாக இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அமரன் முக்கியமான படமாக இருக்கும். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படம் சீரியஸ் கதாநாயகனாக மாற்ற இருக்கிறது.
ட்ரைலரில் செய்த தவறு:
இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பொறுத்தவரை மக்கள் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த பட ட்ரைலர் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் முகுந்த் வரதராஜனின் நிஜ வீடியோக்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் வர்த்தகத்திற்காக இந்த படத்தில் நிஜ இராணுவ வீரரின் காட்சிகளை பயன்படுத்துவது சரியா? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. படத்தின் வியாபரத்திற்காக இவ்வளவு மோசமாக விஷயங்களை செய்ய வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
