தமிழில் ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்சமயம் கூலி திரைப்படம் முடிந்த நிலையில் அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டிய சூழலில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.
அதற்குப் பிறகு நடிகர் சூர்யாவை கதாநாயகனாக வைத்து ரோலக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் இயக்கத்திற்குப் பிறகு நடிகர் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க உள்ளார்.
இது இல்லாமல் கூலி திரைப்படத்திற்குப் பிறகு ரஜினியுடன் இன்னொரு படம் இவர் இயக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே அமீர் கானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கூலி திரைப்படத்தில் அமிர்கான் நடித்த பொழுது வெகு காலங்களாகவே ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பாலிவுட்டில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் அமிர் கான்.
இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது இரும்புக்கை மாயாவி படத்தின் கதையை தான் நான் முதன் முதலில் எழுதினேன்.
சினிமாவிற்கு இயக்குனராக வரும்பொழுது அதை தான் படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு மிகவும் பிடித்த கதை அது என்று கூறலாம் அது எழுதி ஒரு 15 வருடம் ஆகிவிட்டது. இந்த 15 வருடத்திற்குள் தமிழில் வெளிவந்த வேறு சில திரைப்படங்களில் என்னுடைய கதையின் தாக்கம் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
எனவே இதற்குப் பிறகு அந்த கதையை நான் படம் ஆக்க முடியாது ஒருவேளை சூப்பர் ஹீரோ படமாக இருந்தால் கூட புதிதாக ஒரு கதையை எழுதுவேனே தவிர இரும்பு கை மாயாவியை திரும்ப படம் ஆக்க முடியாது என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.