Tamil Cinema News
மனசு கஷ்டமாயிடுச்சி.. எஸ்.கேவிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்த அமீர்கான்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ஓரளவு ஹிட் கொடுத்துவிடும் நிலை உள்ளது.
அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாகவே இருக்கின்றன.
தற்சமயம் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே எக்கச்சக்க வரவேற்புகள் இருந்து வருகின்றன.
இதற்கு நடுவே அமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியான சித்தாரே சமீன்பர் என்கிற திரைப்படத்தில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அமீர்கான் தயாரிப்பதாகதான் இருந்ததாம். ஆனால் அமீர்கானுக்கு அந்த கதை பிடித்துப்போகவே அதில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த விஷயத்தை மேடையில் பகிர்ந்த அமீர்கான் இதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
