Connect with us

கல்லூரி சென்ற எஸ்.பி.பி முகத்தில் அதை வீசிய வாலிபர்!.. பதிலுக்கு அவர் செஞ்சதுதான் மாஸ்!.

spb

Latest News

கல்லூரி சென்ற எஸ்.பி.பி முகத்தில் அதை வீசிய வாலிபர்!.. பதிலுக்கு அவர் செஞ்சதுதான் மாஸ்!.

S. P. Balasubrahmanyam: நாம் எவ்வளவு கவலையாக இருந்தாலும் பாடல் கேட்கும் பொழுது நம்மையும் நாம் அமைதிக்கு சென்று விடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடகரையும், இசையமைப்பாளரையும் பிடிக்கும். அந்த வகையில் ஒரு சிலரின் குரல் எப்பொழுது கேட்டாலும் மனதிற்குள் ஒரு இதமான சூழல் ஒன்று செய்து கொடுக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணி பாடகர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை பற்றி கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இவர் சிறந்த பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகள், தமிழ்நாடு அரசு விருது பிலிம்பேர் விருது, தென்னிந்திய பிலிம்பேர் விருது மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அரசியால் இவரு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

மேலும் கடந்த ஜனவரி 2021 இல் இவருக்கு இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2021-ல் பத்ம விபூஷன் விருதை இவரின் மறைவுக்குப் பிறகு இவரது மகன் எஸ்.பி.பி. சரண் பெற்றுக் கொண்டார்.

எஸ்.பி.பி பகிர்ந்த நிகழ்வு

1972 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் மாணவர்கள் தினத்திற்கு கச்சேரி செய்வதற்காக எஸ்.பி.பியும், எஸ்.பி.பி யின் குழுவை சேர்ந்த சசிரேகாவும் சென்று உள்ளார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு தாமதமானது. மேலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு எஸ்.பி.யும், சசிரேகாவும் தாமதமாக வந்த காரணத்தினால் மாணவர்கள் கூச்சலிட்டார்கள்.

spb

பிறகு மேடையில் பேசிய எஸ்.பி.பி தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார். அப்பொழுது அனைவரும் அமைதியாக இருந்த வேளையில். ஒரு மாணவர் மட்டும் கோபத்தில் ஆப்பிளை அவர் முகத்தில் வீசியுள்ளார். அதனை கையில் பிடித்த எஸ்.பி.பி நல்ல வேலை நான் பசியாக இருப்பதை உணர்ந்து நீங்கள் இந்த ஆப்பிளை எனக்கு கொடுத்தீர்கள் என்று கூறி அந்த ஆப்பிளை அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, உங்கள் பசியை நான் போக்குகிறேன் என்று கூறி 3மணி நேரம் பாடலை பாடி மாணவர்களை மகிழ்வித்துள்ளார்.

அதன் பிறகு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஆப்பிளை எரிந்த மாணவர் கண்களில் கண்ணீருடன் வந்து ஐயா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தினால் நான் அவ்வாறு செய்தேன் எனக் கூறி மன்னிப்பு கேட்டு உள்ளார். பரவாயில்லை எனக்கும் பசி எடுத்தது, நல்ல வேலை நீங்கள் எனக்கு ஆப்பிள் கொடுத்தீர்கள் என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியன்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top