Cinema History
எஸ்.பி.பி பாடுன ரெண்டாவது பாட்டு… ஆனால் அந்த எம்.ஜி.ஆர் படம் வெளியாகவே இல்ல!.. ஏன் தெரியுமா?.
சினிமாவை பொறுத்தவரை இதில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே திரைக்கு வருவதில்லை. பல்வேறு காரணங்களால் பல திரைப்படங்கள் திரைக்கே வருவதில்லை. விஜயகாந்த் திரைப்படங்களிலேயே பல படங்கள் தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டுள்ளது என ஒரு பேச்சு உண்டு.
அதே போல சில திரைப்படங்கள் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனையால் வெளி ஆகாமல் போகும். அப்படி ஒரு எம்.ஜி.ஆர் படத்திற்கும் ஆகியுள்ளது. எம்.ஜி.ஆர் அவரது நண்பர்களுக்காக சில திரைப்படங்களில் நடித்து கொடுப்பது வழக்கம்.

அப்படியாக அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்காக தலைவன் என்கிற திரைப்படம் ஒன்றில் நடித்தார். இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைத்தார். வாலி பாடல் வரிகளை எழுதினார். அப்போது அறிமுகமாகியிருந்த எஸ்.பி.பி அந்த படத்தில் தனது இரண்டாவது பாடலை பாடினார்.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை மட்டும் முடிக்கவே முடியவில்லை. எம்.ஜி.ஆர் தனது நண்பருக்காக தனது கை காசை போட்டு படத்தை எடுத்தும் அதை முடிக்க முடியவில்லை. இறுதியில் அதனால் அந்த படம் வெளியாகவே இல்லை.
