Connect with us

கடைசி வரை அன்பே வா படத்தில் அதை மட்டும் பண்ண முடியல!.. யாருமே கவனிக்கலையே..அதான் இயக்குனர் ட்ரிக்..!

mgr anbe vaa

Cinema History

கடைசி வரை அன்பே வா படத்தில் அதை மட்டும் பண்ண முடியல!.. யாருமே கவனிக்கலையே..அதான் இயக்குனர் ட்ரிக்..!

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். பொதுவாகவே நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் இருக்கும். ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு அந்த அளவிற்கு திரை வட்டாரத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

எம்.ஜி.ஆருக்கு அதிகமாக திரை வாய்ப்புகள் வந்துக்கொண்டிருந்த காரணத்தால் ஏ.வி.எம் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவரை வைத்து அதிக படங்களை தயாரிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் தயாரித்த திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும்.

அன்பே வா திரைப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் சிம்லாவிலும் பாக்கி படப்பிடிப்புகள் ஊட்டியிலும் எடுக்கப்பட்டன.

சிம்லாவிற்கு சென்று படம் பிடித்ததால் பனி பொழிவதில் எம்.ஜி.ஆர் செல்வது போன்ற காட்சியை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் இயக்குனர்.

ஆனால் அவர்கள் நேரமோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் இருந்த நாள் வரை அங்கு பனியே பொழியவில்லை. அதே சமயம் அங்கு பனி மலைகள் நிறைய இருந்தன. அவற்றை மட்டும் படம் பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர்.

இதனால்தான் அந்த படத்தில் பனி பொழிவது போன்ற காட்சிகளே இருக்காது. ஆனால் அது நமக்கு அவ்வளவு உறுத்தலாக தெரியாத அளவிற்கு அந்த படம் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.

To Top