Connect with us

எம்.ஜி.ஆருக்கு அந்த பழக்கம் இருக்கும்னு எங்களுக்கு தெரியாது!.. சிக்கலில் சிக்கிய ஏ.வி.எம் சரவணன்!.

mgr avm saravanan

Cinema History

எம்.ஜி.ஆருக்கு அந்த பழக்கம் இருக்கும்னு எங்களுக்கு தெரியாது!.. சிக்கலில் சிக்கிய ஏ.வி.எம் சரவணன்!.

Social Media Bar

அரசியல் சினிமா என இரு துறைகளிலும் மக்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கை பெற்றவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் கூட மக்களுக்கு நன்மை செய்வது போன்ற கதாபாத்திரங்களில்தான் எம்.ஜி.ஆர் நடிப்பார். அதே போல மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏகப்பட்ட விதிமுறைகளுக்கு நடுவேதான அவரது திரைப்படத்தை இயக்க வேண்டி இருக்கும். படத்தில் நடிப்பவர்களில் துவங்கி, கதை, பாடல் என அனைத்தையும் எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும்.

mgr
mgr

இந்த நிலையில்தான் ஏ.வி.எம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் அன்பே வா திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர் இயக்கினார். ஏ.வி.எம் நிறுவனத்தின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் அன்பே வா திரைப்படம் மட்டும்தான்.

அதுக்கே போதும் போதும் என்றாகிவிட்டதால் பிறகு எம்.ஜி.ஆர் திரைப்படங்களை ஏ.வி.எம் தயாரிக்கவில்லை. அன்பே வா படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே பிரச்சனையில்தான் துவங்கியது. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் படத்தின் முதல் காட்சிக்கான படப்பிடிப்பை அவர்தான் துவங்கி வைப்பார்.

anbe-vaa-movie
anbe-vaa-movie

ஆனால் இந்த விஷயம் ஏ.வி.எம் சரவணனுக்கு தெரியாது. அன்று சரோஜா தேவிக்கு வேறு படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருந்ததால் அவருடைய காட்சிகளை முன்பே படமாக்க வேண்டி இருந்தது. எனவே எம்.ஜி.ஆர் வருவதற்க்கு முன்பே சரோஜா தேவியின் காட்சிகளை படமாக்கிவிட்டு அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் படபிடிப்புக்கு வர முடியாது என கூறிவிட்டார். பிறகு ஏ.வி.எம் சரவணனே அவரிடம் மன்னிப்பு கேட்ட பிறகுதான் படப்பிடிப்புக்கு நடிக்க வந்துள்ளார் எம்.ஜி.ஆர். இந்த நிகழ்வை ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top