Actress
உள்ளாடையுடன் ஆட்டம்… மாலத்தீவில் ஆண் நண்பருடன் அனிஹா..
தென்னிந்திய சினிமாவில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
2010 ஆம் ஆண்டு இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். பிறகு 2014 வரையிலும் தொடர்ந்து அனிகா மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.
நயன்தாராவிற்கே குழந்தையாகவெல்லாம் அப்பொழுது அவர் நடித்து விட்டார். அதன் பிறகு தான் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் வரவேற்பு:
என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், மிருதன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அனிகா சுரேந்திரன். அதற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்து விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்தார் அனிகா சுரேந்திரன்.

தொடர்ந்து 2022க்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை அனிகாவிற்கு வர துவங்கியது. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் ஓ மை டார்லிங். மலையாளத்தில் வெளியானாலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தெலுங்கு திரைப்படம் போல தான் இருந்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் அதிகமான கவர்ச்சி காட்சிகளும் முத்தக் காட்சிகளும் இருந்தன. அவை அனிகாவிற்கு அதிகமான எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியது முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறார் என்று பலரும் இதை குறித்து விமர்சனம் செய்ய தொடங்கினர்.
நல்ல வரவேற்பு:

அதற்கு பிறகுதான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிடி சார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பு பெற்று தந்தது. மேலும் பல வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அனிகா தொடர்ந்து சினிமாவில் பயனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு விடுமுறைக்கு சென்ற அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.
