தனுஷ் படத்தில் கதாநாயகியாக நம்ம அஜித் பொண்ணு அனிஹா… இன்னொரு கதாநாயகியும் இருக்காம்!..

Dhanush : நடிகர் தனுஷ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கமல்ஹாசன் போலவே பல துறைகளிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார். சில படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார் தனுஷ்.

இந்த நிலையில் இயக்குனராகவும் சில படங்களை எடுத்திருக்கிறார் அதில் பா பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குறைந்த பட்ஜெட் படமாகும். தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் தனுஷ்.

anikha surendran
anikha surendran
Social Media Bar

அதாவது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் பட்ஜெட் திரைப்படங்களாக இருந்தாலும் அவர் இயக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்களாகவே உள்ளன. இந்த நிலையில் தற்சமயம் இளைஞர்களை வைத்து புது திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

எனவே இளம் வயது நடிகர்கள் நடிகைகளை அதிகமாக படத்திற்காக எடுத்து வருகிறார். எனவே இந்த படம் பள்ளி பருவ கதையை கூறுவதாக இருக்கலாம் அல்லது கல்லூரி கால கதைகளை கூறுவதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

priya warrior
Priya warrier

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனிகா சுரேந்தர் ஏற்கனவே அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்குகிறார் அதுமட்டுமின்றி நடிகை பிரியா வாரியரும் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது இவர்கள் இருவருமே இளம் வயது நடிகைகள் என்பதால் இந்த திரைப்படம் கண்டிப்பாக கல்லூரி காலக்கதையை பேசும் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.