தமிழில் நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அஞ்சான். கிட்டத்தட்ட பாட்ஷா திரைப்படம் போன்ற ஒரு கதை அமைப்பை கொண்ட திரைப்படம் தான் அஞ்சான் திரைப்படமும்.
பாட்ஷா திரைப்படத்தில் ரஜினியும் அவரது நண்பரும் மும்பையில் நண்பர்களாக இருப்பார்கள். அதற்குப் பிறகு பாட்ஷா என்கிற பெரிய டானாக மாறுவார் ரஜினி. அதே மாதிரி இந்த திரைப்படத்திலும் சூர்யாவும் அவரது நண்பரும் பெரிய ரவுடியாக மும்பையில் இருந்து வருகின்றனர்.
அதற்குப் பிறகு துரோகத்தின் மூலமாக இறந்து போகும் தனது நண்பனுக்காக பழிவாங்க வருகிறார் சூர்யா. இவ்வாறுதான் இதன் கதை அம்சம் இருக்கும். ஆனாலும் கூட படம் வெளியான போது இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அஞ்சான் படம் கொடுத்த வெற்றி:
அதனால் இந்த படம் பெரிய வெற்றியையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கோல்ட் மைன் மனிஷ் என்கிற விநியோகஸ்தர் ஒருவர் அஞ்சான் திரைப்படத்திற்கான இந்தி டப்பிங் உரிமையை வாங்கி இருந்தார். அவர் அஞ்சான் திரைப்படத்தை வேறு மாதிரி எடிட் செய்து அதனை youtube தளத்தில் வெளியிட்டார்.
வெளியாகி இரண்டு வருடங்களில் 22 மில்லியன் பேர் யூடியூபில் அந்த படத்தை பார்த்து இருக்கின்றனர். தற்சமயம் ஹிந்தியில் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை அறிந்த லிங்குசாமி தற்சமயம் மீண்டும் அஞ்சான் திரைப்படத்தை எடிட் செய்து வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.