Tamil Cinema News
அட்லி செய்த சாதனையின் மீது ஆசைக்கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்… என்ன சமாச்சாரம் தெரியுமா?
ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன.
ரமணா, தீனா, கஜினி மாதிரியான நல்ல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் மேலும் நடிகர் விஜய் நடிப்பில் கத்தி சர்கார் என்று இரண்டு ஹிட் திரைப்படங்களை ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்து இருக்கிறார்.
தற்சமயம் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இன்னும் சில மாதங்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு தமிழ் திரைப்படம் செய்வேன் அதற்கு பிறகு சாருக்கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
னால் ஏ ஆர் முருகதாஸிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அவருக்கு முன்பே ஷாருக் கானை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குனராக அட்லி இருக்கிறார்.
