Tamil Cinema News
விரைவில் ரமணா 2… ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த அப்டேட்.!
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.
ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு வரவேற்பும் இப்பொழுது வரை சண்முக பாண்டியனுக்கு கிடைக்கவில்லை. முதல் முறையாக இவர் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு மதுரை வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இவர் படைத்தலைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் சீக்கிரத்திலேயே திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். காடு தொடர்பான ஒரு படமாக இது இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
அதில் ஏ.ஆர் முருகதாஸ் கலந்து கொண்டார். அது ஏ.ஆர் முருகதாஸ் பேசும்பொழுது விஜயகாந்தை வைத்து ரமணா திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். நீங்களும் நன்றாக வளர்ந்து வர வேண்டும் ரமணா 2 திரைப்படத்தை உங்களை வைத்து கண்டிப்பாக எடுக்கலாம்.
மீண்டும் கேப்டனை திரையில் காண்போம் என கூறியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ் ஒருவேளை சண்முக பாண்டியன் ரமணா 2 திரைப்படத்தில் நடித்தால் அது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
