Latest News
ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியில் டிக்கெட் எடுத்த மக்கள் எப்படி இழப்பீடு பெறலாம்!..
இசையமைப்பாளர்களுக்கு எப்போதும் சினிமாவில் குறைவான அளவில்தான் சம்பளம் கிடைக்கும். எனவே அவர்கள் அதிக வருவாயை பெறுவதற்காக பல இடங்களுக்கு சென்று இசை கச்சேரிகள் நடத்துவது உண்டு.
தற்சமயம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் கூட ஒரு இசைக்கச்சேரியை நடத்தினார். ஆனால் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு இடம் இல்லாமல் போனது. இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட இதற்காக 20,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. ஒவ்வொரு டிக்கெட்டும் ஆயிரக்கணக்கில் விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பேர் அமரும் அளவிற்கு அந்த அரங்கம் போதுமானதாக இல்லை.
அதிகப்பட்சம் 3000 பேர் அமரும் அளவிலேயே அரங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் நின்று இந்த கச்சேரியை பார்த்துள்ளனர். இதில் பலருக்கு மூச்சு திணறல் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் டிக்கெட் எடுத்த பலரை உள்ளேயே விடவில்லையாம். அவர்கள் டிக்கெட்டும் எடுத்துவிட்டு வெளியேவே நின்றுள்ளனர். இவ்வளவு கேவலமாக நிகழ்ச்சி நடத்தி எதற்கு மக்களிடம் காசை திருடுகிறீர்கள் என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர் பொது மக்கள்.
அரங்கின் அளவை கணக்கிடாமல் அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே இது முழுக்க முழுக்க நிகழ்ச்சி நடத்தியவர்களின் தவறாகும். ஆனால் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்வோர் கழகம் இப்படி நுகர்வோருக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு உதவி செய்கிறது. எனவே தனக்கு ஏமாற்றம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என நினைப்பவர்கள் நுகர்வோர் மன்றத்தில் இதுக்குறித்து வழக்கு தொடர்வதன் மூலம் டிக்கெட் தொகையுடன் சேர்த்து அவர்களுக்கான இழப்பீடு தொகையையும் பெற வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. அதிகமான மக்கள் இதை ஒரு வழக்காக பதிவு செய்யும்போது அரசு இதற்கு முன்னுரிமை அளிக்கும் என கூறப்படுகிறது.
ஆன்லைன் வாயிலாக கம்ப்ளெயிண்ட் செய்வதற்கு: https://consumerhelpline.gov.in/.
ஆனால் தற்சமயம் ஏ.ஆர் ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் யாரெல்லாம் டிக்கெட் எடுத்து உள்ளே வர முடியவில்லையோ அவர்கள் எல்லாம் அந்த தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்