Latest News
அட்வான்ஸ் பணத்தை ஏமாற்றினாரா ஏ.ஆர்.ரகுமான்? மருத்துவர்கள் புகாரின் நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் தனிபெரும் அடையாளமாக விளங்குபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் லைவ் கான்செர்ட் ஒன்று சென்னையில் நடத்த ஏற்பாடானது. இதற்காக பலரும் டிக்கெட் புக் செய்திருந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் செய்த குளறுபடியால் ரசிகர்கள் இன்னலுக்கு ஆளானார்கள்.
இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பலத்த அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்த பிரச்சினை முடிவதற்குள் இந்திய அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏ.ஆர்.ரகுமான் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் அட்வான்ஸாக கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் நிகழ்ச்சி நடத்த இடமும் அனுமதியும் கிடைக்காததால் அந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனால் அளித்த முன்பணத்தை திரும்ப தரும்படி அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டபோது அவர் முன் தேதியிட்ட காசோலையை அவர்களுக்கு வழங்கியதாகவும், ஆனால் அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பணத்தை கேட்டு வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக அவர்கள் தங்கள் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களது இந்த குற்றச்சாட்டை ஏ.ஆர்.ரஹ்மானின் செயலாளர் செந்தில் வேலவன் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “2018ம் ஆண்டு நடக்க இருந்த தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளும் நடத்துவதற்காக அவர்கள் தொடர்பு கொண்டனர். அதன்படி ஏ.ஆர்,ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ரூ25 லட்சம், மற்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.25 லட்சம் என முன்பணமாக இரண்டு காசோலைகள் அளித்தார்கள்.
சம்பந்தபட்ட அமைப்பு தானாகவே நிகழ்ச்சியை நிறுத்தினாலோ அல்லது ரத்து செய்தாலோ கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் திரும்ப வழங்கப்படாது என்ற ஒப்புதலின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் நிகழ்ச்சி ரத்து ஆன பின்பு ஏ.ஆர்,ரஹ்மான் அந்த முன்பணத்திற்கான காசோலையை திரும்ப வழங்கினார். இந்த நிலையில் தேவையில்லாமல் அவர் பெயரை இந்த புகாரில் சேர்த்துள்ளனர். அவருக்கும் இந்த புகாருக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் கிடையாது. ஏ.ஆர்.ரஹ்மான் மீது தவறான புகார் அளித்த அந்த அசோஷியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்