எங்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.. AR Rahman விவாகரத்து குறித்து மகன் போட்ட பதிவு..!

The divorce of A.R. Rahman and his wife Saira Banu has been the subject of much discussion. In this situation, his son has now spoken out about it.

தமிழ் சினிமாவில் வந்து பல காலங்களாகவே இசையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு நபராக ஏ.ஆர் ரகுமான் இருந்து வருகிறார். அதுவரை தமிழில் இருந்து வந்த இசையில் இருந்து முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு புதுவித இசையை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் ஏ.ஆர் ரகுமான்.

அதனால்தான் ஏ.ஆர் ரகுமானின் பாடல்களுக்கு எப்பொழுதும் அதிகபட்ச மதிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து வரும் நிலையில் தற்சமயம் ஏ ஆர் ரகுமானும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஏனெனில் ஏ.ஆர் ரகுமான் குறித்து இதுவரை பெரிதாக சர்ச்சைகள் என்று எதுவும் வந்ததே கிடையாது. இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சைரா பானுவை விவாகரத்து செய்யப் போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருக்கிறார்.

ar rahman wife
ar rahman wife
Social Media Bar

மகன் வெளியிட்ட பதிவு:

இது ஒரு கடினமான முடிவுதான் என்றாலும் கூட வேறு வழி இன்றி எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீன் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று மட்டும் கூறியிருக்கிறார்.

அதாவது தன்னுடைய தாய் தந்தையரின் இந்த முடிவுக்கு அமீன் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்பதையும் அவர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.