Connect with us

எவ்வளவோ பேர்க்கிட்ட வேலை பாத்திருக்கேன், ஆனா டி.ஆர் மாதிரி ஒருத்தர பார்த்ததில்ல – மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!

Cinema History

எவ்வளவோ பேர்க்கிட்ட வேலை பாத்திருக்கேன், ஆனா டி.ஆர் மாதிரி ஒருத்தர பார்த்ததில்ல – மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!

Social Media Bar

தமிழில் சோக படங்களை வைத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் டி.ஆர். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அப்போதைய காலக்கட்டத்தில் இவரது பல படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார்.

டி.ஆர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இத்தனைக்கும் இசை பள்ளிகளுக்கெல்லாம் சென்று படிக்காதவர் டி.ராஜேந்திரன். சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

பத்து தல திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்துள்ளார். அவர் மேடையில் இதுக்குறித்து பேசும்போது “இசை துறையில் நான் பலருடன் வேலை பார்த்திருக்கிறேன். எம்.எஸ்.வியில் துவங்கி இப்போது உள்ள பிரபலங்கள் வரை பலருடன் வேலை பார்த்திருக்கிறேன்.

ஆனால் டி.ஆர் மாதிரியான ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை. அதுவரை நான் ஒரு கூச்ச சுபாவத்தோடுதான் இருந்தேன். ஆனால் டி.ஆரை பார்த்தவுடன் அந்த கூச்ச சுபாவம் என்னை விட்டு போனது.

மேலும் டி.ஆர் வேலை செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை பார்த்துதான் இசை துறையில் எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரிந்துக்கொண்டேன்” என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

Articles

parle g
madampatty rangaraj
To Top