Connect with us

குடிப்போதையில் அந்த நபர் செய்த வேலை.. மாறிப்போன ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை..!

Tamil Cinema News

குடிப்போதையில் அந்த நபர் செய்த வேலை.. மாறிப்போன ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு இசையை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு உண்டு. ஏ ஆர் ரகுமான் புது ரக இசைகளை அறிமுகப்படுத்த துவங்கிய பிறகுதான் இசையில் ஒரு மாற்றம் தமிழ் சினிமாவில் நடந்தது.

அதற்கு பிறகு நிறைய புது வகையான பாடல்கள் வந்திருக்கின்றன. ஏ.ஆர் ரகுமான் இது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடம் மட்டும்தான் எப்பொழுதும் தைரியமாக புதிய இசையை அறிமுகப்படுத்துவேன்.

மற்ற எந்த மொழியிலும் நான் புதிய இசையை முயற்சி செய்து பார்க்க மாட்டேன். ஏனெனில் தமிழ் ரசிகர்கள்தான் புதிதாக ஒரு இசை போடப்பட்டு அது நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

மற்ற மொழிகளில் அப்படி கொடுப்பது கிடையாது என்று ஏ.ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இப்படி புது இசையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு காரணமாக இருந்த நிகழ்வையும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ar rahman

ar rahman

அதில் அவர் கூறும் பொழுது நான் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த பொழுது ஒருவர் நன்றாக மது அருந்திவிட்டு என்னிடம் வந்து பேசினார். அவர் எங்களுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு இசை கலைஞர் தான். அவர் கூறும் பொழுது தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறாய்.

உனக்கென்று வித்தியாசமாக என்ன செய்யப் போகிறாய் என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பிறகு தான் தனித்துவமான இசையை அமைப்பது குறித்து நான் யோசிக்க துவங்கினேன், என்று ஏ.ஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.

அதற்கு பிறகுதான் ஏ ஆர் ரகுமான் நிறைய ஆல்பம் பாடல்களையும் வெளியிட தொடங்கி இருக்கிறார். அது ஏ.ஆர் ரகுமானை தனித்துவமான ஒரு இசையமைப்பாளராக மாற்றியும் இருக்கிறது.

To Top