Connect with us

AR Rahman போட்ட 3 கண்டிஷன்.. பதிலுக்கு மனைவி கேட்ட 2 கேள்வி..!அப்போவே அப்படி இருந்துருக்கு.!

ar rahman pair

Tamil Cinema News

AR Rahman போட்ட 3 கண்டிஷன்.. பதிலுக்கு மனைவி கேட்ட 2 கேள்வி..!அப்போவே அப்படி இருந்துருக்கு.!

Social Media Bar

Recently, divorces of screen celebrities have been happening a lot in Tamil cinema. Especially this year alone, people have been hearing a lot of divorce news. It is shocking that music composer A.R. Rahman is also going to get divorced.

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் விவாகரத்து என்பது தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்து வருகிறது. அதிலும் இந்த வருடம் மட்டும் நிறைய விவாகரத்து செய்திகளை மக்கள் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து.

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து இப்படி கேள்விப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து இருக்கிறார். மற்ற ஜோடிகளாவது திருமணம் ஆகி குறைந்த வருடங்களிலேயே விவாகரத்துக்கு முன் வந்து இருக்கின்றனர்.

ஏ.ஆர் ரகுமான்:

ஆனால் ஏ.ஆர் ரகுமானை பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட 29 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்திருக்கிறார். அவரது மகள்களே வளர்ந்து விட்டனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் ஏன் விவாகரத்து முடிவை எடுக்க வேண்டும் என்பது பலர் கேள்வியாக இருக்கிறது.

ar rahman

ar rahman

வயதான பிறகு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் வாழ போகிறார்கள் அதை சேர்ந்து வாழ்ந்தால் என்ன என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இருவருக்கும் இதயம் உடைந்த பிறகு சேர்ந்து வாழ்வது கடினம் என்பதாக ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரகுமானின் திருமணம் 1995 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அவருக்கு வயது 27 ஆனால் 1992 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். அவர் சினிமாவில் அறிமுகமான உடனே அவருக்கு பெண் தேட துவங்கிவிட்டார்.

திருமண வாழ்க்கை:

அவரது அம்மாவான கரிமா பேகம் இப்படியாக பெண் தேடும் பொழுது ஏ.ஆர் ரகுமான் மூன்று கண்டிஷன்கள் வைத்திருக்கிறார். அது என்னவென்றால் பெண் படித்த பெண்ணாக இருக்க வேண்டும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும் மற்றும் குணமான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ar rahman wife

ar rahman wife

பிறகு சாய்ரா பானுவை மணமுடிக்க இருந்த பொழுது சாய்ரா பானுவிற்கு இரண்டு கேள்விகள் ஏ.ஆர் ரகுமானிடம் இருந்திருக்கின்றன. அது என்னவென்றால் தனது கணவருக்கு நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதாகும்.

இது இரண்டுமே ஏ.ஆர் ரகுமானுக்கு தெரியும் என்ற பிறகு தான் அவர் ஏ.ஆர் ரகுமானை திருமணம் செய்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே இவ்வளவு விதிமுறைகளின் அடிப்படையில் தான் இவர்கள் திருமணம் நடந்ததா என்று கேட்டு வருகின்றனர்.

To Top