கட்சி உள்விவகாரத்தால் சிக்கலில் சிக்கிய அரண்மனை 4 – உதயநிதிதான் மனசு வைக்கணும்!..

Aranmanai 4: ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படம் வெளியான பிறகு பேய் படங்களுக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து லாரன்ஸ் முனி திரைப்படத்தின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்து வந்தார்.

அதேபோல இயக்குனர் சுந்தர் சியும் படம் எடுப்போம் என்று இயக்கிய திரைப்படம்தான் அரண்மனை திரைப்படம். அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அடுத்த பாகங்கள் வர துவங்கின.

மூன்றாம் பாகம் வரை வந்த அரண்மனை திரைப்படம் மூன்று முறையும் நல்ல வெற்றியை தான் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நான்காம் பாகம் படமாக்கப்பட்டுள்ளது. 2020 லிருந்தே அரண்மனை நான்காம் பாகத்தின் படபிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா வந்ததன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பில் தாமதமானது.

raashi khanna
raashi khanna
Social Media Bar

இதில் முக்கிய கதாபாத்திரமாக தமன்னா நடித்திருக்கிறார். சுந்தர் சி திரைப்படத்தைப் பொறுத்தவரை அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருக்கும். தற்சமயம் அந்த விஷயத்தில் தமன்னா பிரபலமாக இருப்பதால் அவரையும் ராஷி கண்ணாவையும் முக்கிய கதாபாத்திரமாக களம் இறக்கி இருக்கிறார் சுந்தர் சி.

சுந்தர் சி தயாரித்த இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடும்  உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒரு பா.ஜ.க அரசியல்வாதியும் இருக்கிறாராம்.

இது கட்சி ரீதியாக தங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று நினைத்த உதயநிதி தற்சமயம் இந்த படத்தை வெளியிட முடியாது என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் முதல் தயாரிப்பாளரான குஷ்புவுமே பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்தான்.

இந்த நிலையில் வெளியிடுவதற்கான உரிமத்தை மாற்றும் நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.