ரோஜா நடிச்ச அந்த படத்தோட காப்பியா!.. எப்படியிருக்கு அரண்மனை 4 திரைப்படம்!.

தமிழில் வெற்றிக்கரமாக பேய் படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். ராகவா லாரன்ஸ் ஒவ்வொரு படத்திற்கும் பேய்களின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் சுந்தர் சி அப்படி செய்யாமல் தொடர்ந்து ஒரே ஒரு பேயை வைத்தே திரைப்படத்தை கொண்டு சென்றார்.

வழக்கமான சுந்தர் சி திரைப்படம் போலவே இந்த திரைப்படத்திலும் ஒரு அரண்மனை அந்த அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை அடிப்படையாக கொண்டே கதை செல்கிறது.

thammanna aranmanai 4
thammanna aranmanai 4
Social Media Bar

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி சுந்தர் சியின் தங்கையான தமன்னா சந்தோஷ் பிரதாப்பை காதலித்து வருகிறார். அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் காதலனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுகிறார். பிறகு 10 வருடங்கள் கழித்து தமன்னா தற்கொலை செய்துக்கொண்டதாக சுந்தர் சிக்கு தகவல் வருகிறது.

தமன்னாவின் கணவரும் மாரடைப்பில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அநாதையாக இருக்கும் தங்கையின் குழந்தைக்காக அவர்கள் வாழ்ந்த அரண்மனைக்கு செல்கிறார் சுந்தர் சி. அப்போதுதான் தனது தங்கையும் அவரது கணவரும் இயற்கையாக இறக்கவில்லை.

கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சுந்தர் சிக்கு தெரிகிறது. மேலும் இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதையும் அதனால் தனது தங்கை குழந்தை உயிருக்கே ஆபத்து என்பதையும் அறிகிறார் சுந்தர் சி.

aranmanai-4-poster
aranmanai-4-poster

இதற்கு நடுவே தமன்னாவின் ஆன்மாவும் சுந்தர் சியும் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்றுவதே கதையாக இருக்கிறது. படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. ஆனால் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தும் கூட படத்தில் காமெடி அவ்வளவாக எடுப்படவில்லை.

இதனை தாண்டி ரோஜா நடித்த பொட்டு அம்மன் என்கிற திரைப்படத்தின் கதையும் அரண்மனை 4 படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் படத்தை ஒரு முறை திரையரங்கில் பார்க்கலாம்.