News
விஜய் படத்தில் கமிட் ஆகும் அரவிந்த்சாமி!.. வெளியான புது அப்டேட்….
தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தனக்கென பெரும் ரசிக பட்டாளத்தையும் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு மார்க்கெட்டையும் கொண்டுள்ளார். தற்சமயம் லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அவர் இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியான படமாகவே இருக்கும். எனவே கண்டிப்பாக இந்த படம் அப்படிதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மொத்தம் இரண்டு விஜய் என்றும் பேச்சுக்கள் உள்ளன. நடிகை ஸ்னேகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் கூட கமிட் ஆவதாக பேச்சு வார்த்தைகள் இருந்து வருகின்றன. தனி ஒருவன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக இருந்தவர் அரவிந்த்சாமி. எனவே இந்த படத்திலும் வில்லனாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
அதே சமயம் இவர் விஜய்க்கு நண்பனாக நடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் விஜய் படத்தில் அரவிந்த் சாமி கூட்டணி போடுவது நல்ல காம்போவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
