Tamil Cinema News
இந்த படத்தின் காபியா அகத்தியா… இரண்டு ஜென்மங்களில் வரும் ஜீவா.. வெளியான ட்ரைலர்.!
உலகளவில் மாயாஜால திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு என்பது எப்பொழுதுமே அதிகமாக தான் இருந்து வருகிறது.
ஏனெனில் மாயாஜால திரைப்படங்கள் என்பது நாம் இதுவரை பார்க்காத புதிய புதிய விஷயங்களை காட்டுபவையாக இருக்கும். மேலும் அந்த வகை திரைப்படங்களில் என்ன வேண்டுமானாலும் கதையில் நடக்கலாம் என்கிற ஒரு விஷயமும் இருக்கும்.
தற்சமயம் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியர். இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.
கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா விஜய் இயக்கி வருகிறார். படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படம் என்று கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு இடத்திற்கு ஜீவா செல்கிறார்.
ஆனால் போன ஜென்மத்தில் ஜீவாதான் அந்த இடத்தில் உரிமையாளராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு பேய் இவர்களால் உருவாகி இருக்கிறது.
அது அதை அவர்களை வரவிடாமல் தடுக்கிறது. இவ்வாறு தான் படத்தின் கதை செல்கிறது. இது ட்ரெயிலரின் வழியாக மட்டுமே அறிந்த கதையாகும். ஆனால் இந்த கதையை பார்க்கும் ரசிகர்கள் பலரும் கூறும்பொழுது உலகளவில் நிறைய திரைப்படங்கள் இந்த மாதிரி வந்து விட்டன.
முன் ஜென்மத்தில் நாம் செய்த தவறு காரணமாக இந்த ஜென்மத்தில் பேய் வந்து நம்மை பழிவாங்குவதாக அந்த கதை அம்சங்கள் இருக்கும். அதே வகையில்தான் அகத்தியர் திரைப்படத்தின் கதையும் அமைந்திருக்கிறது சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பூல் புலாயா 3 திரைப்படத்தில் கூட கதை அம்சம் இதே மாதிரி தான் இருந்தது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
