Connect with us

இயக்குனரே சொன்னாலும் விஜய் செஞ்ச அந்த விஷயத்தை அர்ஜூன் செய்ய மாட்டார்!.. அப்படி ஒரு கொள்கை..

arjun vijay leo

News

இயக்குனரே சொன்னாலும் விஜய் செஞ்ச அந்த விஷயத்தை அர்ஜூன் செய்ய மாட்டார்!.. அப்படி ஒரு கொள்கை..

Social Media Bar

தமிழில் வெகு காலங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவிற்கு மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இப்போது வரை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் காரணத்தினால் அவரது வயது பெரிதாக வெளியில் தெரியாது.

இப்போதும் கூட சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடும் அளவிற்கு அவரது உடலை சரியாக வைத்துள்ளார் அர்ஜுன். மங்காத்தா திரைப்படம் அர்ஜுனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கின சில திரைப்படங்களில் அவருக்கு வில்லன் வாய்ப்புகளும் வந்தன.

ஹீரோ மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்சமயம் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது கெட்ட வார்த்தை மற்றும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளை பேசமாட்டேன்.

ஏனெனில் குடும்பங்கள் அனைவரும் சேர்ந்துதான் ஒரு திரைப்படத்தை பார்ப்பார்கள். அவர்கள் முகம் சுளிக்கும் வகையில் எந்த ஒரு காட்சியும் எனது நடிப்பில் இருக்கக் கூடாது என்று நான் நினைப்பேன். எனவே இயக்குனரே சொன்னாலும் கூட அந்த மாதிரியான காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அர்ஜுன். தற்சமயம் விஜய் லியோ படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை பேசி நடித்திருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இந்த நேரத்தில் அர்ஜுனின் இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது..

Articles

parle g
madampatty rangaraj
To Top