அந்த படத்தோட பேருக்கு ஏன் சர்ச்சையை கிளப்பினாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியல!.. நல்ல பேர்தானப்பா!.. வருந்திய அர்ஜுன்..
Actor Arjun : தமிழில் ஆக்ஷன் கிங், தென்னிந்திய புரூஸ்லீ என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கான வரவேற்பு என்பது எக்கச்சக்கமாக இருந்தது என்று கூறலாம்.
இளமை காலங்களில் அவரது சண்டை காட்சிகள் பிரபலமானதாக இருந்தன ஒருமுறை நடிகர் சிவாஜி கணேசனே அர்ஜுனின் சண்டை காட்சிகளை பார்த்து வியந்து அவரை பாராட்டியதாக அர்ஜுன் ஒருமுறை கூறியிருக்கிறார்.

அந்த அளவிற்கு அர்ஜுனுக்கு மார்க்கெட் இருந்தது போகப் போக அவருக்கான மார்க்கெட் குறைய தொடங்கியது. ஆனாலும் இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அர்ஜுன்.
பெயரில் வந்த பிரச்சனை:
இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்குனராகவும் இருந்திருக்கிறார் இயக்குனராக இவர் இயக்கிய திரைப்படம்தான் ஜெய்ஹிந்த்.இந்த திரைப்படம் குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் அர்ஜுன்.
அவர் இயக்கிய ஜெய்ஹிந்த் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படத்தை வெளியிட இருக்கும் பொழுது வரிவிதிப்புகளில் சில பிரச்சினைகள் இருந்தன. ஏன் இப்படி பிரச்சினைகள் இருக்கின்றன என கேட்ட பொழுது ஜெய் ஹிந்த் என்பது தமிழ் பெயர் கிடையாது.

தமிழ் பெயர் அல்லாத திரைப்படங்களுக்கு வரி விஷயத்தில் எந்த மாற்றமும் செய்து தர மாட்டோம் என்று கூறிவிட்டனர். அப்பொழுது பேசிய அர்ஜுன் ஜெய்ஹிந்த் என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கூறக்கூடிய கூற வேண்டிய ஒரு முக்கியமான வசனம் ஆகும்.
அதை நீங்கள் மொழிவாரியாக பிரித்து பார்க்க கூடாது என்று அர்ஜுன் கூறியும் கூட அவர்கள் கேட்கவில்லை இதனை பேட்டியில் கூறும் அர்ஜுன் இப்போது வரை அந்த திரைப்படத்தின் பெயருக்கு அவ்வளவு விமர்சனங்கள் வந்தது எதற்காக என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார் அர்ஜுன்.