Connect with us

ப்ளான் பண்ணி அடிச்சாலும் எஸ்கேப் ஆன அருண் விஜய்!.. தனுஷ், சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுக்கிறார்!..

mission chapter 1

News

ப்ளான் பண்ணி அடிச்சாலும் எஸ்கேப் ஆன அருண் விஜய்!.. தனுஷ், சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுக்கிறார்!..

Social Media Bar

Actor Arun Vijay : பொங்கலுக்கு திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது சினிமாவில் வழக்கமாக நடந்து வரும் ஒரு விஷயம்தான். அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும் போட்டி போட்டது.

இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவு வசூலை கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல வசூலைதான் கொடுத்துள்ளது இதுவரை நிலவரப்படி அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படம்தான் நல்ல வசூலை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் ஒன் என்கிற திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. ஆனால் நிறைய திரையரங்குகளில் அந்த படம் வெளியாகவில்லை. இதனால் மக்களுக்கும் பெரிதாக அந்த படம் குறித்து தெரியவில்லை.

ஆனால் வெளியான சில திரையரங்குகளில் அந்த படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து நல்லவிதமான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இரண்டு பெரிய படங்கள் வெளியானதால்தான் அருண் விஜய் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் போனது என கூறப்படுகிறது.

மொத்தமே தமிழக அளவில் 80 திரையரங்கில்தான் மிஷன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை பார்த்து தற்சமயம் இன்னும் சில திரையரங்குகள் அந்த திரைப்படத்தை திரையிட துவங்கியுள்ளனர். இவ்வளவு பெரிய கதாநாயகர்கள் படங்கள் வெளியாகியும் கூட நல்ல கதையின் காரணமாக தற்சமயம் அருண் விஜய்யின் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

To Top