News
வனிதா இதோட நிறுத்திக்கலைனா விளைவுகள் கடுமையா இருக்கும்!.. வார்னிங் கொடுத்த நடிகர் அருண் விஜய்!.
விஜயக்குமார் குடும்பத்தில் அவரது பிள்ளைகள் அனைவருமே திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தனர். அதில் வனிதா விஜயக்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் போக போக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் படங்களில் எல்லாம் நடிக்காமல்தான் இருந்து வந்தார் வனிதா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார். இதனை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகள், யூ ட்யூப் பேட்டிகள் போன்றவற்றில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது.
இந்த நிலையில் பேட்டிகளில் சொந்த வாழ்க்கை விஷயங்களை அவர் பகிர்ந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப்போது கூட விஜயக்குமாரை இழிவாக பேசியிருந்தார் வனிதா.

இந்த நிலையில் இவரை குறித்து பேசிய அருண் விஜய் கூறும்போது தன்னுடைய மோசமான செயல்கள் மற்றும் தவறான புத்தி காரணமாக வனிதாவின் நிலை மோசமாகியுள்ளது. ஆனால் அதற்கு அவர் எங்களை குறை கூறுகிறார்.
என் தந்தை குறித்து பேசுவதை வனிதா நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருக்கிறார் அருண் விஜய்!.
