அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுனா எல்லாம் கிடைக்கும்!.. நடிகையை வேட்டையாட திட்டமிட்ட பிரபல நடிகையின் தம்பி!..
தற்பொழுது சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பேச்சுகள் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் எந்த ஒரு நடிகை பேட்டி கொடுத்தாலும் இந்த விஷயங்களைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் நிச்சயம் இது போன்ற விஷயங்களை தங்கள் கடந்து தான் வந்திருக்கிறோம் என கூறுகிறார்கள்.
சினிமாவில் ஒரு நடிகை நிலைத்திருக்க வேண்டும் என்றால் இவ்வாறான பிரச்சனைகளை தாங்கள் சந்தித்து வருவதாகவும், ஆனால் எல்லோரும் சினிமாவில் அவ்வாறு இருப்பதில்லை ஒரு சிலர்கள் அவ்வாறு இருக்கிறார்கள் எனவும் கூறி வருகிறார்கள்.
மேலும் ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் சினிமாவில் நிலைத்திருக்க முடியும் என்று கூறினால், அவர்கள் சொல்வதற்கு நாம் பணிந்து செல்லக்கூடாது. வேறு தொழிலை செய்து கொண்டு நாம் நம் வாழ்க்கையை வாழலாம் எனவும் ஒரு சில நடிகைகள் தைரியமாக வெளியில் பேசுகிறார்கள்.
இந்நிலையில் இதுபோன்ற பல சர்ச்சைகளும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், தற்போது பிரபல நடிகையின் தம்பி ஒருவர் பற்றிய சர்ச்சைகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
பிரபல நடிகையின் தம்பி
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டும் நம்பி பல நடிகைகள் முன்னணி நடிகையாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் தேவயானி. தேவயானியின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் நகுல். இவர் முதன் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நகுல் நடிகர் மட்டுமல்லாமல் பாடகரும் ஆவார். பாய்ஸ் படத்திற்கு பிறகு ஒரு சில குறிப்பிட்ட படங்களில் மட்டும் நகுல் நடித்து வந்தார். இதில் இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி ,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சர்ச்சையில் சிக்கிய நடிகர் நகுல்
இந்நிலையில் சந்துரு என்ற உதவி இயக்குனர் ஒருவர் நடிகர் நக்குலை பற்றிய விஷயங்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதில் வாஸ்கோடகாமா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பவி டீச்சர் என்று அழைக்கப்படும் பிரிகிடா சாகா தான்.
ஆனால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லவில்லை என்ற காரணத்தினால் நகுல் பிரிகிடா சாகாவை இந்த படத்திலிருந்து தூக்கிவிட்டார் என தெரிவித்திருக்கிறார். தற்பொழுது நகுல் பற்றி உதவி இயக்குனர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.