தளபதிய வெச்சு செஞ்சிட்டா போச்சு..! – அமேசான் கேள்விக்கு அட்லீ பதில்!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார் அட்லீ.

அதை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார், தற்போது ஷாரூக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார் அட்லீ.

சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதில் “பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு முழு படமும் எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்” என கூறப்பட்டிருந்தது.

அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த அட்லீ “செஞ்சுட்டா போச்சு” என்று கூறியுள்ளார். பிகில் படம் வந்தபோதே அதில் விஜய் நடித்த மைக்கெல் ராயப்பன் கேரக்டரை வைத்து தனி படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில் அப்படி படம் எடுக்க நான் ரெடி என்பது போல சிக்னல் கொடுத்துள்ளார் அட்லீ.

Refresh