News
வெகு நாட்களுக்கு பின்பு சந்தித்துக்கொண்ட சினிமா ஜாம்பவான்கள் – சேர்ந்து பார்த்து எத்தன நாள் ஆகுது
தமிழ் சினிமா துறையில் நடிப்பில் பெரிய இமையம் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சொல்லலாம். அதே போல இசையில் பெரிய ஜாம்பவானாக இருப்பவர் இசைஞானி இளையராஜா.

ரஜினியும், இளையராஜாவும் ரொம்ப காலமாக நண்பர்களாக இருந்து வருபவர்கள், ரஜினிகாந்தின் ஆரம்பக்கட்ட திரைப்படங்கள் பலவற்றிற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க திரைப்படம் என்றால் தளபதியை கூறலாம். இன்றும் இளைய தலைமுறையினர் ரசித்து கேட்கும் அளவில் தளபதி படத்தில் பாடல்கள் உள்ளன.

வருகிற ஜூன் 2 அன்று இளையராஜாவிற்கு 79வது பிறந்த நாள் வர இருக்கிறது. இதை கொண்டாடுவதற்காக கோயம்புத்தூரில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி கொண்டுள்ளது. இந்த நிலையில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் இளையராஜா. வெகுநாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதால் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
பிறகு கோயம்புத்தூரில் நடக்கும் விழா குறித்து ரஜினியிடம் கூறியுள்ளார் இளையராஜா. அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண் ஆகி வருகிறது.
