Connect with us

எவ்வளவு காசு கொடுத்தாலும் சிம்பிளாதான் படம் எடுக்க தெரியும்.. நான் அவ்வளவுதான்!.. ஓப்பனாக கூறிய அட்லீ..

atlee

News

எவ்வளவு காசு கொடுத்தாலும் சிம்பிளாதான் படம் எடுக்க தெரியும்.. நான் அவ்வளவுதான்!.. ஓப்பனாக கூறிய அட்லீ..

Social Media Bar

Director Atlee: தமிழில் அதிக பொருட் செலவில் படம் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ஷங்கருக்கு பிறகு பிரபலமாக அறியப்படுபவர் இயக்குனர் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ தொடர்ந்து தமிழில் ராஜா ராணி என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இயக்குனர் அட்லீ மீது தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது ஹாலிவுட்டில் வரும் அவருக்கு பிடித்த காட்சிகளை அப்படியே காபி அடித்து தனது திரைப்படத்தில் வைத்துவிடுகிறார் என கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றாற் போல அவரும் மெர்சல் திரைப்படத்தில் பல படங்களின் காட்சிகளை காபி அடித்து வைத்திருந்தார். இந்த நிலையில் தனது படம் குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கும்போது ஒரே மாதிரியான கதைக்களத்தையே மாற்றி மாற்றி நீங்கள் எடுப்பது போல தோன்றுகிறதே என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அட்லீ, இல்லை நான் எப்போதும் சிம்பிளான கதையைதான் தேர்ந்தெடுப்பேன். எனது குரு ஷங்கர் எனக்கு சொல்லிக்கொடுத்த விஷயம் அது. ஒரு கதையை எளிதாக புரிய வைக்க முடியவில்லை என்றால் அதை படமாக்காதே என அவர் கூறியுள்ளார்.

எனது கதைகள் சிம்பிளாக இருந்தாலும் அவற்றின் திரைக்கதையை பிரமாண்டமாக அமைத்துவிடுவேன் என கூறியுள்ளார் அட்லீ. எனவே படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களை அட்லீ இயக்கத்தில் காண முடியாது என இதன் மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top