Cinema History
ஒரு மாசத்தில் ஹிந்தி கத்துக்கிட்டு வர்ரேன்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு சவால் விட்ட இயக்குனர்!.. ஓவர் கான்ஃபிடன்ஸ் போல!..
AVM Cinemas : தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஏ.வி.எம் நிறுவனம் உள்ளது. ஒரு காமெடியில் வடிவேலுவிடம் சினிமாவை கண்டு பிடித்தது யார் என கேட்கும்போது ஏ.வி மெய்யப்பன் செட்டியார் என கூறுவார்.
அந்த அளவிற்கு அப்போதைய காலக்கட்டத்தில் சினிமாவை கண்டறிந்ததே ஏ.வி மெய்யப்ப செட்டியார்தான் என்கிற மனநிலை மக்களில் பலருக்கே இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஏ.வி.எம் நிறுவனம் படங்களை தயாரித்து வந்தது. இந்த நிலையில்தான் ஹிந்தியில் படம் தயாரிக்கவும் துவங்கியிருந்தது ஏ.வி.எம்.
ஆனால் ஹிந்தியில் ஏற்கனவே நிறைய தயாரிப்பாளர்கள் இருந்ததால் ஏ.வி.எம் கஷ்டப்பட்டே படங்களை எடுக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில்தான் குலதெய்வம் என்று தமிழில் வெளியான திரைப்படத்தை ஹிந்தியில் படமாக்கலாம் என திட்டமிட்டார் ஏ.வி.எம்.
எனவே இதுக்குறித்து அந்த படத்தின் இயக்குனர் எஸ்.பஞ்சு அவர்களிடம் பேசினார். பஞ்சுவும் அந்த படத்தை ஹிந்தியில் எடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு ஹிந்தி தெரியாது. எனவே ஹிந்தி உதவியாளர் ஒருவரை அமர்த்திக்கொண்டு மும்பைக்கு சென்றார்.
ஆனால் அந்த உதவியாளர் அங்கு ஒழுங்காக வேலை பார்க்கவே இல்லை. தொடர்ந்து ஊர் சுற்றிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பானார் இயக்குனர் எஸ்.பஞ்சு. பிறகு ஏ.வி.எம்மை சந்தித்த பஞ்சு அவரிடம் பேசும்போது இந்த உதவியாள் சரியில்லை. நான் அவனை தேடி கொண்டிருப்பேனா அல்லது படத்தை எடுப்பேனா என கேட்டார்.
மேலும் எனக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள் நான் ஹிந்தி கற்றுக்கொண்டு வந்து படத்தை எடுக்கிறேன் என கூறிய பஞ்சு அதன்படியே ஒரு மாதத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டு வந்து அந்த படத்தை இயக்கினார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்