அதுக்கு ஆசைப்பட்டுதான் பாம்பே நடிகையை கேக்குறாங்க… ஹீரோ நடிகர்கள் குறித்து உண்மையை கூறிய ஏ.வி.எம் குமரன்..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளை விடவும் வேற்று மொழி நடிகைகள்தான் அதிகமாக பங்கேற்கின்றனர். பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து வந்து நடிக்கும் நடிகைகள் சிலர் கடைசியில் தமிழில் வாய்ப்பே கிடைக்காமல் தெலுங்கு கன்னடம் என்று சென்று விடுவார்கள்.
நடிகை சமந்தாவை கூட அதற்கு உதாரணமாக கூறலாம். எப்படி இந்த வட இந்திய நடிகைகள் இவ்வளவு அதிகம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள் என பார்க்கும் பொழுது அதற்கு கதாநாயகர்கள்தான் காரணம் என்று கூறுகிறார் ஏவிஎம் குமரன்.
ஏ.வி.எம் நிறுவனம்:

தற்சமயம் ஏவிஎம் நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார் இவர் சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு ஏவிஎம் நிறுவனம் எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை. அது குறித்து அவர் பேசும் பொழுது இந்த காலத்தில் நடிகர்கள் நடிக்கும் கதை சரியில்லை இயக்குனர்கள் என்ன மாதிரியான கதைகளை இயக்குகிறார்கள் என்பதே புரியவில்லை.
ஒரு படத்தில் கதை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடிகிறது ஹீரோக்களும் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு பாம்பே ஹீரோயின்கள்தான் வேண்டும் என்று கேட்கின்றனர்.
மலையாள சினிமா:

ஆனால் அந்த பாம்பேவில் இருந்து வருகிறவர்களுக்கு சரியாக நடிக்க கூட தெரிவதில்லை. தமிழும் பேச தெரியவில்லை. அவர்களை வைத்து படத்தை இயக்குவது சிரமமான விஷயமாக இருக்கிறது.
மேலும் மலையாள சினிமாவில் பத்து பதினைந்து கோடிக்கு படத்தை எடுத்து 100, 200 கோடிக்கு ஓட விட்டு வசூல் செய்கின்றனர். அதுதான் சரியான சினிமா வியாபாரம். படத்தின் பட்ஜெட் 200 கோடி ஆனால் வசூல் நூறு கோடி தான் என்றால் அது என்ன வகையான பிசினஸ். அதுதான் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் ஏவிஎம் குமரன்.