Connect with us

முதல் நாளே இவ்வளவுதான் வசூலா!.. அயலான் வசூலால் அதிருப்தியில் சிவகார்த்திகேயன்!..

ayalaan

News

முதல் நாளே இவ்வளவுதான் வசூலா!.. அயலான் வசூலால் அதிருப்தியில் சிவகார்த்திகேயன்!..

Social Media Bar

Sivakarthikeyan ayalaan : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெகு காலங்களாக தயாராகி வந்த திரைப்படம் அயலான். மற்ற திரைப்படங்களைப் போல் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு அதிகமாக செலவு செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தயாராகிக் கொண்டிருக்கிறது அயலான் திரைப்படம் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயனும் சரி படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் சரி இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி இருந்தனர்.

கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதே போல பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் திரைப்படமாக அயலான் திரைப்படம் மட்டுமே இருந்தது.

ayalaan
ayalaan

ஆனாலும் கூட அயலான் குழு எதிர்பார்த்த அளவிலான வசூலை அந்த திரைப்படம் நேற்று கொடுக்கவில்லை. ஆம் நேற்று தான் அயலான் திரைப்படம் வெளியானது. அதே சமயம் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்மஸ் ஆகிய திரைப்படங்களும் வெளியாகின.

இந்த போட்டியில் அயலான் திரைப்படம் பின்னடைவை கண்டுள்ளது என்று கூற வேண்டும் திரைப்படத்த எடுக்க 80 கோடியில் இருந்து 100 கோடி வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வெறும் 4 கோடிக்கு முதல் நாள் வசூலை படம் கண்டிருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் பொங்கல் அன்று மக்கள் அதிகமாக திரையரங்கிற்கு வருவார்கள். அப்போது ஏதாவது வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

To Top