News
சிவகார்த்திகேயனை பார்த்து லோகேஷ் கத்துக்கணும்!.. கிராபிக்ஸில் லியோவை மிஞ்சிய அயலான்.
தமிழ் சினிமாவில் அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது.
தற்சமயம் லியோ படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அது இரு வகையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முக்கியமாக அதில் விஜய் பயன்படுத்தி இருக்கும் கெட்ட வார்த்தைகள் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்த படமும் பார்ப்பதற்கு மற்ற லோகேஷ் படங்கள் மாதிரியே அடிதடி, ரவுடிசம் என்றே இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவையெல்லாம் பார்க்க சுமாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட இருக்கும் சிவகார்த்திகேயன் தனது திரைப்படமான அயலான் படத்தின் டீசரை தற்சமயம் வெளியிட்டிருந்தார். அந்த டீசர் முழுக்க படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளோடு ஒப்பிடும்பொழுது லியோ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அந்த கிராபிக்ஸ் வேலைக்காக தான் படம் இவ்வளவு தாமதமானது என்று சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
