Connect with us

பணமே சம்பாதிக்க தெரியாதவர்தான் பாக்கியராஜ்!. அவ்வளவு வாய்ப்பு கொடுக்க அதுதான் காரணம்!.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்!.

News

பணமே சம்பாதிக்க தெரியாதவர்தான் பாக்கியராஜ்!. அவ்வளவு வாய்ப்பு கொடுக்க அதுதான் காரணம்!.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்!.

Social Media Bar

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனரானார் பாக்கியராஜ். அதன் வழியாக வெற்றிக்கரமாக நடிகராகவும் தனது பயணத்தை துவங்கினார்.

திரையுலகில் ஆரம்பக்கட்டத்தில் அவருக்கு உதவிய பலருக்கும் காசு கூட பார்க்காமல் உதவியுள்ளார் என கூறுகிறார் சினிமா பிரபலம் கலைஞானம். எப்போதுமே அவர் சின்ன தயாரிப்பாளர்களுக்குதான் படம் பண்ணுவார். ஏ.வி.எம் நிறுவனத்திற்கு கூட முந்தானை முடிச்சி மாதிரி ஒரு சில படங்கள் மட்டும்தான் பண்ணியிருக்கார்.

பாக்கியராஜின் முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தை தயாரித்து அவருக்கு ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் கே.கோபிநாத். இதனால் அதற்கு பிறகு அந்த தயாரிப்பாளருக்கு மூன்று படங்கள் நடித்து கொடுத்துள்ளார் பாக்கியராஜ்.

bhagyaraj-1
bhagyaraj-1

அதே போல அவரது குருவான பாரதிராஜா மற்றும் பாலகுருவிற்கும் கூட திரைப்படம் நடித்து கொடுத்துள்ளார் பாக்கியராஜ். இதே போல ஒருமுறை இயக்குனர் பி.மாதவன் பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை அறிந்த பாக்கியராஜ் அவரை இயக்குனராக வைத்து திரைப்படம் தயாரிக்க நினைத்தார்.

தமிழில் பட்டிக்காடா பட்டிணமா, வியட்நாம் வீடு போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பி.மாதவன். ஆனாலும் பொண்ணு பாக்க போறேன் என்கிற அந்த படம் தயாரானப்போது அதில் பி.மாதவன் இயக்குனராக இல்லை. மாறாக என்.முருகேஷ் என்பவர்தான் இயக்குனராக இருந்தார். அதே போல பாக்கியராஜும் அந்த படத்தை தயாரிக்கவில்லை.

To Top