News
இதுக்காக பிச்சை எடுக்கிற நிலமையே வந்தாலும் கவலைப்பட மாட்டேன்!.. ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த KPY பாலா!.
KPY Bala : விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. சின்னத்திரையில் வளர்ந்து வந்த காலகட்டம் முதலே மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதை முக்கியமான வேலையாக கொண்டிருந்தார் பாலா.
அப்போதே ஆதரவற்றவர்கள் முதியவர்கள் ஆகியோருக்கு பல உதவிகளை பாலா செய்து வந்தார். அவரால் என்ன முடியுமோ அதை எல்லாம் செய்து வந்தார். இதனால் பாலாவிற்கான வரவேற்பு என்பது திரை துறையிலும் அதிகரித்தது. பாலாவிற்கு வாய்ப்புகளும் அதிகமாக வர துவங்கின.
வாய்ப்புகள் அதிகமாக வர வர அதற்குத் தகுந்தார் போல மக்களுக்கு நன்மைகளையும் செய்ய துவங்கினார் பாலா. தற்சமயம் சென்னையில் வெள்ளம் வந்தபோது கூட அதற்காக மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருந்தார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத பல இடங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தந்துள்ளார்.

தற்சமயம் இலவச ஆட்டோ சேவையையும் துவங்கியிருக்கிறார். இதன் மூலம் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆட்டோவின் எண்ணுக்கு அழைப்பதன் மூலம் இலவசமாகவே அவர்கள் அந்த மருத்துவமனைக்கு சென்று வர முடியும் என்று கூறியிருக்கிறார் பாலா.
அவர் இது குறித்து பேட்டியில் பேசும் பொழுது நான் செய்யும் நன்மைகள் குறித்து சிலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் இப்படியே செய்து கொண்டிருந்தால் சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலைமைதான் ஏற்படும் என்று என்னை எச்சரிக்கின்றனர். ஆனால் அந்த சிக்னலில் நான் பிச்சை எடுக்கும் பொழுது என்னுடைய ஆம்புலன்ஸ் என்னை கடந்து போனால் அது தான் என்னுடைய வெற்றி என்று நினைக்கிறேன் என்று அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பாலா.
