News
ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய சூர்யா.. இதுதான் காரணம்? – படக்குழு அளித்த விளக்கம்!
நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். தலைப்பிடப்படாத இந்த படம் தற்போது சூர்யா 41 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
பிதாமகன், நந்தா படங்களுக்கு பிறகு சூர்யா – பாலா கூட்டணியில் மற்றுமொரு படம் தயாராகி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதில் சூர்யா ஒரு மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணி கன்னியாக்குமரியில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும், பாலாவுக்கு இடையே சண்டை எழுந்ததாகவும் இதனால் சூர்யா ஷூட்டிங்கிலிருந்து பாதியில் வெளியேறியதாகவும் சோசியல் மீடியாவில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், கன்னியாக்குமரியில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும், படப்பிடிப்பு முடிந்ததால் சூர்யா அங்கிருந்து கிளம்பியதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவே பல்வேறு பணிகள் இருப்பதாகவும் அதையெல்லாம் முடித்து விரிவான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
