இவ்ளோ பாட்டு எழுதியும்.. டீ கூட குடுக்கல..! – உண்மையை அம்பலப்படுத்திய வைரமுத்து!

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக பாடலாசிரியராக இருந்து வருபவர் கவிஞர் வைரமுத்து.

நிழல்கள் படத்தில் பொன்மாலை பொழுது பாடல் மூலமாக தனது பயணத்தை தொடர்ந்தவர் இன்றுவரை பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். இதுதவிர நாவல், கவிதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் நிலை குறித்து மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார் வைரமுத்து. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் கற்பனாவாதிகள், கலைஞர்கள் சட்டம் அறியாதவர்கள்.

ஐபிஆர்எஸ் வருவதற்கு முன்னால் எங்களுக்கு ராயல்டி அல்ல நாயர் டீ கூட கிடைக்காது. அதற்கு பிறகு தான் ராயல்டி என்ற பேச்சே எங்களுக்கு வந்தது. வெளிநாடுகளில் ஒருவன் 100 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டால் பின்னர் அவன் எழுதவே தேவை இருக்காது. அந்த பாடல்களுக்கு வரும் காசில் தனி தீவே வாங்கி விடலாம்.

ஆனால் 7500க்கும் அதிகமான பாடல்களை எழுதிய நான் இவர்கள் அனுப்பக்கூடிய சில லட்சங்களுக்காக இன்னமும் காத்திருக்கிறேன்” என வேதனையுடன் பேசியுள்ளார்.

Refresh