Connect with us

நடிகைகள் கிட்ட இந்த மாதிரி நடந்துக்குறது தப்பு!.. அஞ்சலி விஷயத்தில் பாலய்யாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

actress anjali

News

நடிகைகள் கிட்ட இந்த மாதிரி நடந்துக்குறது தப்பு!.. அஞ்சலி விஷயத்தில் பாலய்யாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடி தெரு மாதிரியான சில திரைப்படங்கள் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

கருப்பாக பார்ப்பதற்கு ஊர்க்கார பெண் மாதிரி இருந்த காரணத்தினாலேயே அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்கள் எல்லாம அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன.

தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு:

ஆனால் சில காலங்களில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் நடிகை அஞ்சலி. அதற்கு பிறகு மற்ற மொழிகளில் நடிக்க துவங்கினார். வெகு காலங்களுக்கு பிறகு தற்சமயம் இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாரான ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அஞ்சலி.

இந்த நிலையில் தெலுங்கில் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலில் நடனமாடியது மூலமாக அங்கு பிரபலமானார் அஞ்சலி. இதனையடுத்து அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.

வெளியீட்டு விழா:

இந்த படத்தின் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணா வந்திருந்தார். அவர் மேடையில் அஞ்சலியிடம் மோசமாக நடந்துக்கொண்டார். பொதுவாக பெண்கள் விஷயத்தில் பாலகிருஷ்ணா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே இன்னமும் கூட இப்படி ஏதாவது ஒன்றை இவர் செய்துகொண்டு இருக்கிறாரே என அவரை விமர்சித்து வருகின்றனர்.

To Top